ஆறோடும் நீரோடும்: வாதலை மு.முருகேசன்

Updated on
1 min read

மலையிற் பிறந்து மண்ணில் தவழ்ந்து
மானுடம் வளர்த்தது ஆறு!
நானிலம் செழிக்க நலமது கொடுக்க
சீறிப்பாய்ந்தது ஆறு!
இன்றோ மாநிலம் முழுக்க அணைகளை நிரப்பி
கடைமடை தன்னில் காய்ந்தது பாரு!
இருகரை தொட்டு நுரையொடு பொங்கி
சலசலவென்று ஓடியது ஆறு!
இன்றோ வெள்ளம் மிகுந்து சென்றதைப் பார்த்தது யாரு?
ஆற்றின் மணலைக் கொத்தி
மனதைக் குதறி பணமாய் மாற்றும் மானிடமே!
ஊரோடு நீரோடு போராடும் காலம் இது.
நீருக்காய் உன் சந்ததி யாரோடு போராடப் போகுது?
ஆதலால் நீ சேமிப்பாய் வான் மழையை!
அதற்காக சீரமைப்பாய் நீர் நிலையை!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com