நீர் வற்றியக் குளம்: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

Updated on
1 min read
குளத்தில்நீர்  வற்றியதில்  கவலையில்லை -- மழைபொழியும் !           குளங்கள்பல  காணாமல்  போனதனைக்  காண்க !களங்களாகி  மனைகளாகி  அவைகளெல்லாம் -- அரசியல்            கயவர்பலர்  கவர்ந்திட்ட  அவலமதை  உணர்க!உளந்தனிலே  தூய்மையிலார்  தமைதேர்ந்திட்டே -- நாம்            ஓலமிட்டு  அழுகின்றோம்  கொள்ளைதனைக்  கண்டு !விளக்கமதை  என்றுமக்கள்  கண்டிடத்தகுமோ -- கொடிய            வீணர்களை  விரட்டிடும்நாள்  என்னாள்  தானோ ?​எதனைத்தான்  கவர்வதென்ற  வரைமுறையின்றி -- காணும்            எதனையுமே  கவர்கின்றத்  திறன்தனைக்  கொண்டுமுதலில்லாத்  தொழிலாக  இதனைக்கொண்டார் -- ஏரி            முதலாகக்  குளங்கள்வரை  தனதெனக்  கண்டார் !சதகோடி  காண்கின்றத்  திறன்தனைக்கொண்டு -- பலரும்            சாதனையைப்  புரிந்திட்டார்  தமிழகந்  தன்னில் !இதனைநாம்  இன்னுமிங்கே  பொறுத்திடத்தகுமோ -- நம்மை            இவ்வுலகோர்  தூற்றிடவே  காண்பதும்  முறையோ ?நீர்வற்றியக்  குளந்தனைப்  போன்ற -- அவல            நிலைதன்னில்  தமிழக  ஆட்சி !கூர்கெட்டோர்  தமைநாம்  தேர்ந்தே --  ஆளக்            கோட்டைபுக  விட்டதால்  தானேசீரகெட்டுப்  போனதின்  நாடும் -- மக்கள்             சிறிதேனும்  மகிழ்வினைக்  காணார் !போர்வந்து  ஓய்ந்ததன்  பின்னம் -- காணும்             பொலிவிழந்த  நிலைதனில்  நாடும் !நீர்வற்றியக்  குளங்களதே  நிலம்மீது  எங்கெங்கும்கார்மேகம்  மழைபொழியாக்  காரணத்தால் ! -- சீர்கொண்டுவிவசாயம்  தழைப்பதெங்கே ? வேளாண்மை  இல்லையாச்சு !தவறெல்லாம்  காட்டையழிப்ப  தால் !கவனமுடன்  அரசாங்கம்  கணக்கற்ற  அணைகள்கட்டாத்தவறால்தான்  காணும்நீர்த்  தட்டுப்பாடு ! -- இவர்களெலாம்இலவசங்கள்  தனைத்தந்தே  ஏய்த்திட்டார்  வாக்கைப்பெற ;பலனிதுவே  என்றானதைப்  பார் !நீர்வற்றிய  நிலைகண்டு  நிலைகுலைந்தோம்  நாமெல்லாம்,கூர்கெட்டோர் ஆட்சியாலிக்  கொடுமையெலாம் ! -- நீர்மேகம்கணக்காகப்  பொழிந்திட்டக்  கதையில்லை  எந்தஆண்டும் ;இணக்கமுடன்  சேர்க்கஅணைகள்  இல்லை !குளங்களதும்  ஏரிகளும்  குன்றியதே  அளவினிலே,விளக்கமிலா  அரசியல்  வீணர்களால் ! -- களங்களாக்கிவீடுகளைக் கட்டிக்கொள்ள  விட்டதனால்  நேர்ந்தகதி ;கேடுகெட்டோ  ரால்வந்தக்  கேடு !வற்றாதக்  குளங்களிலே  வகைவகையாய்  நீர்மலர்களைப்பெற்றிருந்தோம்  அக்காலம்  பெரிதுமாய் ! -- குற்றப்பின்னணியைக்  கொண்டோரை  பெரிதுமாய்த்  தேர்ந்தபலன்குன்றியதே  நீர்வளமெனக்  கூறு !              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com