நீர் வற்றிய குளம்: ஆனந்த் சுப்ரமணியம்

Updated on
1 min read

குளம் பூமியின் அகம்
நீர் அதன் வளம்

நீரில்லா குளம்
உயிரில்லா ஜீவனுக்கு சமம்

நீரின் அவசியம் உணர்ந்த காலம்
குளங்கள் பிறந்த பொற்காலம்

குளங்களின் பராமரிப்பு தவறிய காலம்
அதற்கு மூடுவிழா நடத்திய காலம்

மனிதனின் சுய நலத்தால்
குளங்களை இழந்தோம்

மனிதனின் ஆணவத்தால்
குளங்கள் மறைந்தன

இன்னும் நல்ல உள்ளங்கள் இருப்பதால்
மறைந்த குளங்கள் மறு ஜென்மம் பெறுகின்றன

நீர் வற்றிய குளங்களின்
இன்றைய நிலை,

குப்பைகளின் தாய்வீடு
புது மாளிகைகளின் அஸ்திவாரம்
மனிதனின் வேண்டா தேவைகளுக்கு
புகலிடம்
வறண்ட பூமிப் பிளவுகலும்,
சறுகுகளும், சங்கமமாகும் இடம்

ஒன்றாய் பாடுபட்டு, தூர் வாரி,
இயற்கை வளத்தை காப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com