நீர் வற்றிய குளம்: கா. மகேந்திரபிரபு

Updated on
1 min read

மழை இல்லை அதனாலே 
மகிழ்ச்சி இல்லை - எங்கும்
அனல் காற்று - கதிரின் வீரியம் 
கானல் நீர் எங்கும் சூழ 
கண்களில் கூட நீர் வற்றுகிறது !

உழைக்கும் உடல்கள் 
வியர்வை மழையில் நனைய
வீதியெங்கும் அனல் மழை 
வீட்டுக்குள்ளே  அடங்கும் வாழ்க்கை !

வெடிப்புகளுடன் குளம் 
வற்றிய நிலையில் வாடிப்போனது !
கொக்கையும் காணவில்லை 
குருவியையும் காணவில்லை !

தொலைந்து போனது 
குளிர்காற்றின் இதம் !
அளவில்லா வெப்பஉயர்வு 
அனைவரும் காயும் நிலை !

குளம் வற்றிப்போனது 
மனித குலம் செய்த செயல்களாலே! 
குளம் வற்றிப்போனது - இது 
மனித வரலாறு காணும் 
மாபெரும் வறட்சியின் சுவடு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com