நீர் வற்றிய குளம்: சிவகுமார் நடராஜன்

Updated on
1 min read

கதிரவனை கண்டு மலரும் தாமரையும்
சந்திரனை கண்டு மலரும் அல்லியும்
அதை நாடி வந்த வண்டினங்களும்
என்னுடன் இல்லை எனும் போது
வற்றிய குளமாகிய நான் கவலை கொள்கிறேன்

நீச்சலடித்தும், குட்டிக்கரணமடித்தும், 
கும்மாளமிட்டு குளித்தவர்களும்,
கந்தலை கசக்கிய மகளிர்களும்
காணவில்லையே என கவலை கொள்கிறேன்

துள்ளி விளையாடும் கயல்களை
அள்ளிச்செல்ல புள்ளினங்களோ
வலைவீசி பிடிக்க மானிடனோ
வரவில்லையே என கவலை கொள்கிறேன்

வீசும் கடும் கோடை வெப்பத்தை தாக்குபிடிக்க
எருமையினங்கள் நீர் இல்லாவிடினும்
சேற்றிலாவது உழன்று செல்ல நான் வறண்டு போனதால்
வரவில்லையே என கவலை கொள்கிறேன்

நீண்டு, அகன்ற ஆறாக இல்லாமல்
குறுகிய நிலப்பரப்பில் குளமாக
இருந்து விட்டேனே என எண்ணும் போது
கவலை வரவில்லை எனக்கு
ஏனெனில்....

மணல் கடத்தல் காரணமாக 
கொலை, கொள்ளை, இயற்கை வளம் சுரண்டல் 
போன்ற பல குற்றச் செயல்களுக்கு காரணமாகவும், 
குழாய் போட்டு உறிஞ்சி குளிர் பானம் தயாரிக்க, 
நிலத்தடி நீர் குறைய, வறட்சி நிலவ 
நான் காரணமில்லை எனும் போது 
கவலை வரவில்லை எனக்கு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com