நீர் வற்றிய குளம்:  ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

Updated on
1 min read

மனசு நிறைந்தால்
வாழ்வு இனிக்கும்
தண்ணீர் நிறைந்தால் 
குளமும் சிரிக்கும் 
பல்லுயிரும் அங்கே
துள்ளி விளையாடுவதால்.

முற்றிப் பழம் வெடித்தால்
கனியின் சுவை கூடும் 
வற்றி குளம் வெடித்தால்
வளர்ந்த பயிர் வாடும்
பயிர் வாடியதால் விவசாயி
உயிர் விடுகிறான் நாளும்.

நிறைந்து வழிந்த குளம்
வறண்டு போனதென்ன?
உற்றுக் கவனித்தால் 
உண்மை புரியவரும்
குளத்தை தூர்வாரவில்லை
நீர்வரும் வழியை அடைத்துவிட்டோம்.

தண்ணீர் வரும் வழியெங்கும் 
ஆக்கிரமிப்பு ஆனபின்னே
குளம் நிறைய வழியெங்கே?
ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டால்
அடுத்த மழையில் நீர் நிறையும்
உடன் செய்வோம் பலன் பெறுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com