நீர் வறண்ட குளம் : பேராசிரியர்  கிருஷ்ணன்

Updated on
1 min read

கொக்குகள் தீண்டா குளம் 
மாடுகளும் மனிதரும் மகிழ்வுற்ற குளம் 
மாறியது எருமை சேறு பூச 
கொக்குகள் மீன்பிடிக்க ஏதுவாய் 

அன்றும் மனிதன் அதில் மீன் பிடித்தான் 
மாதம் ஓட  மண் மட்டும் மிஞ்சியது 
அன்றும் மனிதன் இருந்தான் 
மண்ணை அள்ள 
மனிதன்  கிடைத்ததில் பிழைக்கும்  ஒருவரா ?

கிடைத்ததை எல்லாம் அழிக்கும் சந்தர்ப்பாவாதியா ?
மாடும் ,கொக்கும்,எருமையும்,
இருந்தது  போனது 
பகுத்தறிவு மனிதனோ ?

எபபோதும் இருப்பாதாய் நினைத்து 
போகத்தான் போகின்றான் 
வறண்ட  குளத்தில்  நீர் வரும் 
மாடு வரும் எருமை வரும் கொக்கு வரும் 
அவற்றை எல்லாம் மாறானதாக நினைத்து 
மனிதன் மட்டும் வளர்ந்து விட்ட்தாக 
நினைப்பிப்பதே  பகுத்தறிவு .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com