நீர் வற்றிய குளம்: எஸ்.மைக்கேல் ஜீவநேசன்

Updated on
1 min read

முன்னெப்போதும் நடந்ததில்லை என் வாழ்வில்
தொடர்மழையும் மிதக்கும் நகரமும்.

முன்னெப்போதும் பார்த்ததில்லை என் வயதில்
வீசும் அனல் காற்றும் விரிசல் குளமும்.

முன்னெப்போதும் கேட்டதில்லை என் நினைவில்
வெடித்துவிட்ட வயலில் பால்டாய்ல் மரணங்கள்.

முன்னெப்போதும் கண்டதில்லை என் கண்கள்
தலைநகரில் மலம் திண்ணும் போராட்டம்.

முன்னெப்போதும் அறிந்ததில்லை என் உணர்வில்
நாடே திரும்பி பார்த்தும் பாராதிருந்த பிரதமநிலை.

இனியெப்போதும் நடந்திடாதிருக்க என் மனதில்
ஆழ உழுகிறது விவசாய கண்ணீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com