வாழவைக்கும் இயற்கைக்கு
வஞ்சிக்கவும் தெரியுமோ?
வற்றிய மனிதம் போலவே
குளங்கள் வற்றியே
கிடக்கின்றனவே!
முற்பகலில் செய்த தவறுக்கு
இப்போது அறுவடையோ?
தானமும் தவமும் அருகிப்
போனது;
பொய்யும் புரட்டும்
பெருகிப்போனது!
வானம் வறண்டது.
மழைத்துளி மறந்தது.
பூமி காய்ந்தது,
புல் பூண்டற்றுப் போனது;
குளம் வற்ற கேட்கவா வேண்டும்;
ஊழ் வினை உறுத்து வந்து
ஊட்டுகிறது வற்றிய குளத்தின்
வடிவினிலே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.