நீர் வற்றிய குளம்: சென்னிமலைதண்டபாணி

Updated on
1 min read

நீர் வற்றிய குளம்பெருகிட
நிலம்வற்றிட கண்டே
கார்வற்றிய வான்மீதினில்
கனல்வீசிட நின்றேன்.
ஊர்பாழ்படத் தாம்வாழ்ந்திட
உரைத்தார்பல பொய்கள்
யார்பொறுப்பதோ இப்பாதகம்
அடிவயிற்றினில் நெருப்பாம்..

மதிகெட்டவர் மனமற்றவர்
மக்கள்நலம் மறந்தே
நதிவிற்றனர்..மணல்விற்றனர்
நலம்விற்றனர் நாளும்.
கதியற்றவர் விதியற்றவர்
கண்ணீர்வடித் திடவே
சதிசெய்தவர் நலம்பெற்றிடல்
சரியோ?அட சரியோ?

பொங்கும்மழை எங்கும்இலை
புவியேவறண் டாச்சே
எங்கும்கொடும் பஞ்சம்என
ஏங்கும்நிலை யாச்சே
இங்கேகொடும் பஞ்சம்பிணி
இனிமேல்எழும் என்றால்
எங்கேயடா மனிதம்எனும்
எதிர்ப்புப்புயல் எழுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com