நீர் வற்றிய குளம்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன் 

Updated on
1 min read

குளிர்ந்திட வேண்டும்
குளங்கள் பெருகிட
ஏரிகள் முடங்கின
ஏழை வாழ்வு சரிந்து போனது
தாகம் தாகம் தாகம்
தண்ணீர் கிடைக்குமா
விவசாயிகள் போராட்டம்
விளையுமா பயிர்
தண்ணீர் வருண்டது
தத்தளிக்கும் மக்கள்
அனல் பறக்கும் காற்று
அனைவருக்கும் வேண்டும் மழை
இறைவனை வேண்டி
இயற்கையைப் பாதுகாப்போம்
வறண்டு போயின கிராமங்கள்
வறுமை உருவாகியது இம்மண்ணில்
தாயே தரணியில்
தாகம் தீருமா
பச்சை பசுமைகள் வளர்ந்திட
பவள மணியாய் மழை பொழிந்திட
வருண பகவானை வணங்கிட வேண்டும்
வான் மழைப் பெருகிட வேண்டும்
மலை அருவி போல்
மண்ணில் பொழிந்திட வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com