ஒற்றைச் சிறகோடு: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

Updated on
1 min read

ஒற்றைச்  சிறகுயென  உன்னதநல்  அன்னங்களும்
மற்றதைப்போல்  காணுமோ  மகிழ்வுதனை? --பெற்றிட்ட
இரண்டினிலே  ஒருசிறகை  இழந்திட்டப்  பறவையென
விரக்தியே; வாழ்வதுவே  வீண் !

ஒற்றைச்  சிறகுயென , உயர்வானில்  பறந்துமகிழ
உற்றநற்  பறவைகட்கு  உதவாதாம் ! -- பெற்றதனில்
குறைநேரக்  காண்பதெலாம்  கொடுமையே;  வாழ்வினிலே
சிறகொடிந்த  பறவைக்கேது  சீர் ?

சிறகொடிந்த  பறவையெனல்  சீரழிந்த  நிலையுணர்த்தும் ;
பிறவொன்றும்  உணர்த்தாதாம்  பெரிதுமாய் ; -- குறையுடன்
வாழ்வதினும்  கொடிதானது  வையகத்தில்  வேறில்லை,
தாழ்வுறக்  காண்பதனை  தவிர் !

சிறகொடிந்தப்  பறவையென  சீரில்லை , சிறப்பில்லை;
இரையென்றே  ஆகிடுமாம்  எளிதினிலே ! -- குறைநேரக்
கண்டுவிட  விதிமுடிந்தக்  கதையேதான் ;  அவைகட்கு
உண்டாமோ  வாழ்விந்த  உலகில் ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com