ஒற்றைச் சிறகோடு:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

Updated on
1 min read

ஒற்றைச் சிறகோடு
உயிர்வாதையுற்று
பறக்கும் புள் நான்....

விரிந்து கொண்டேயிருக்கும்
வானம்.
அடிமைப்படுத்த நினைத்து
சிறகை வெட்டிவிட்ட
கள்ளத்தனம்....

கூண்டுக்குள் அடைக்கும்
முயற்சியில் தோற்றதால்
தப்பிவிட்ட ஒற்றைச் சிறகு.
ஆகாயம் முழுதும்
அளக்க நினைக்க எண்ணும்
சிறுபறவைக்குக் கூடுமோ
செயலில் வெற்றி..

வெட்டிவிட்டதால்
கிளைகள் ஏதுமின்றி
நெட்டை நெடுமரம்
பட்டுப் போன நிலையில்

எங்கே அமர்ந்து
எப்போது ஓய்வெடுக்கும்
இந்தச் சிறுபுள்....
எப்படித் தன்
ஒற்றைச் சிறகை
கோதிக்கொள்ளும் அலகால்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com