ஒற்றைச் சிறகோடு - கு.முருகேசன்

Updated on
1 min read

பறக்கத்தான்  இரட்டை சிறகுகள்
சிறக்க சிறகொன்றே போதும்!
ஒற்றைச் சிறகோடும்
உலகை சுற்றலாம்.

ஒற்றைச் சிறகோடு
முயற்சிப்பவர்கள்
மாற்றுத்திறனாளிகள் அல்ல
உலகையே மாற்றும் திறனாளிகள்!

விடாமுயற்சி இருந்தால்
விரும்பிய இலக்கு
விண்ணிலிருந்தாலும்
விரைந்து தொடலாம்!

எல்லா ஊதுபத்திகளும்
ஒற்றைக்காலில் 
தவமிருந்தே
சொர்க்கத்தை  அடைகிறது!

எல்லா மலர்களும்
ஒற்றைக்காலில்
தவமிருந்தே
முக்தியடைகிறது!

ஒற்றைக்காலில் நின்றே
கொடிக் கம்பங்கள் எல்லாம்
உயர்த்திப் பிடிக்கின்றன
தேசிக்கொடியையும்!
கட்சிக்கொடியையும்!

ஒத்தையாத்தான்
ஜல்லிக்கட்டு காளை ஓடுது!
ஒரு கூட்டம் வந்து பிடித்தாலும்
வெற்றி காணுது!

ஒத்த அச்சில் நின்னுதானே
பூமி சுத்துது!
ஒத்தைக் கண்ணில்தானே காகம்
உலகைப் பார்க்குது!

ஒத்தை மாட்டு வண்டியிலும்
சுமைகள் ஏற்றலாம்!
ஒத்தையடிப் பாதையிலும்
ஊர் போய் சேரலாம்!

ஒதுங்கி நிற்கும்
ஒற்றைப் பனைமரம் தோப்பாகாது!
ஒடிந்து நிற்கும்
மொட்டைப் பனைமரம் கூட
ஒற்றைக் குருவியின் கூடு ஆகலாம்!

ஒற்றை சூரியனே!
உலகின் ஒளிவிளக்கு!
ஒற்றை சந்திரனே!
இரவின் தனிச்சிறப்பு!

ஒற்றைக் கைதான் உள்ளதென்று
ஒதுங்கிவிடாதே!
நம்பிக்கையோடு எழுந்தால்
வில்லையும் வளைக்கலாம்!

ஒற்றைக் கால்தான் உள்ளதென்று
ஒதுங்கி உட்கார்ந்து விடாதே
ஒரு கால் நீ ஒலிம்பிக்கில் ஓடி
தங்கப் பதக்கம் வெல்லலாம்!

ஒற்றைச் சிறகோடு வாழலாம்
தவறில்லை
ஒருநாளும் சிறையில் வாழும்
தவறு செய்யாமல் பார்த்துக்கொள்!

முயற்சி செய்! நீ 
சிறகொடிந்த பின்பும்
சிகரம் தொடலாம்!
பயிற்சி செய் ! நீ
பல்லிழந்த பின்பும்
பகோடா திண்ணலாம்!

ஒற்றனின் தகவலே
அரசனுக்கு
போரில்
வெல்ல உதவும்!

காதலியின் ஒற்றைச் சொல்லில்
காதல் வீழலாம்!
ஒருதலைக் காதலிலும்
காதல் வாழலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com