ஒற்றைச் சிறகோடு : ப்ரதீபா சிவகுமார்

Updated on
1 min read

உங்களின் பார்வையில்
நான் ஒரு விசித்திரப் பறவை. 

இதனால் எனக்கு ஏதுமில்லை கவலை. 
எனக்கு இருப்பதோ ஒற்றைச் சிறகு. 

இதனால் ஒன்றுமில்லையே பெரிய தவறு? 
ஒற்றைச் சிறகோடு நான் எப்படிப் பறப்பேன்
என்பது உங்களின் கேள்வி.

ஆனால் அறிவீர்களா?  எனக்கு ஒருபோதும் பிடிக்காதது தோல்வி.
முயன்றால் முடியாதது என்பது  எதுவுமே இல்லை
முயற்சியால் பலன் பெறாதவர்கள் என்று எவருமே  இல்லை. 
யானையின் பலம் தும்பிக்கையில்  என்றால் 
எனது பலம் தன்னம்பிக்கையில்தான். 

எப்படிப் பறப்பேன் என்று எண்ணாதீர்கள். 
விரைவில் பறப்பேன் வியப்படையாதீர்கள். 
மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். 

ஒற்றைச் சிறகிலும் உல்லாசமாகப் பறக்கலாம், அது சாத்தியம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com