ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும்  சொல்: இராம இளங்கோவன்

Updated On :10 ஜூன் 2018, 10:57 am
வெல்லும் சொல்லை வாளாய் சுழற்றிக் கொல்லும் சொல்லைக் கொன்று போடுவோம்; இல்லை என்ற சொல்லை வாழ்வில் இல்லா தாக்க எழுச்சிக் கொள்வோம்! வலிமை யுள்ள வெல்லும் சொல்லால் வையத் தலையெ  ழுத்தை மாற்றுவோம் ;வலிகள் நிறைந்த சொல்லை நீக்கிவாழ்வில் இன்ப வளத்தைப் கூட்டுவோம்! அல்லும் பகலும் அயரா துழைப்போர் அழுகையை மாற்ற வெல்லும் சொல்லால் நல்லன  நாற்றாய்  நட்டு வைப்போம்;பொல்லாச் சொல்லைப் போட்டு புதைப்போம்! நெல்லை விளைக்கும் வயலாய் நல்ல வெல்லும் சொல்லை விளைய வைப்போம்;கல்லும் கனிந்து கனிச்சுவை யாக,கானலும் பருகிட கண்டு பிடிப்போம்! தொல்லை யானத் துயரச் சொல்லை அல்லவை விளைக்கும் ஆகாச் சொல்லை எல்லாம் களைந்து எழுச்சி ஊட்டும் வெல்லும் சொல்லை வாழ்வில் ஏற்போம்! இல்லந் தோறும் உள்ளந் தோறும் இத்தரை தோறும்  துறைகள் தோறும் வெல்லத் தமிழின் வெல்லும் சொல்லை மனிதம் விளைய விதைத்து வைப்போம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.