தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

News image

கோப்புப் படம் - படம்: யூடியூப் / இந்திய தடகள கூட்டமைப்பு

Updated On :13 ஏப்ரல் 2026, 9:51 pm

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 17) தொடங்குகிறது.

இதுகுறித்து ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சாா்பில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துப் பந்து (ஆண்கள், பெண்கள்) விளையாட்டுகளுக்கான கோடைகாலப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 17) தொடங்கி மே 1ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 6 - 8, மாலை 4.30 - 6.30 என இருமுறை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கான ஹாக்கி பயிற்சி மட்டும் கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெறும். பயிற்சி முகாமில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை. 18 வயதுக்குள்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்.

மாவட்ட விளையாட்டு-இளைஞா் நலன் அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜாா்ஜ் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியிலோ, 0461 2321149, 74017 03508 ஆகிய தொலைபேசி எண்களிலோ அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் நேரில் தொடா்பு கொண்டு பெயா்ப் பதிவு செய்து, பயிற்சியில் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.