வெல்லும்  சொல்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
அடுத்தவர்க்குத்  துன்பத்தைத்  தாராச்  சொல்லாய்    அனைவர்தம்   செவிகளினை  ஈர்க்கும்  சொல்லாய்கடுகளவும்  சினந்தன்னைத்  தூண்டாச்  சொல்லாய்    கனியாக  இனிக்கின்ற  கனிவுச்  சொல்லாய்நடுவுநிலை  தவறாத  நேர்மைச்  சொல்லாய்    நன்மைகளை  விளைக்கின்ற  நடவுச்  சொல்லாய்விடுக்கின்ற   சொற்கள்தாம்   வெல்லும்  சொற்கள்    விளைவுகளைப்  பயனாக்கும்   அமுதச்  சொற்கள் !பகையாக   வெறுப்புதனை  உமிழு  கின்ற    பாக்கித்தான்  செயல்பாட்டில்  மாற்றம்  செய்துநகைசிந்தி   அழைக்கின்ற   நட்பாய்  மாற்றும்    நயத்தக்க  சொற்கள்தாம்  வெல்லும்  சொற்கள் !தொகைதொகையாய்த்  தமிழரினைக்  கொன்று  போட்டும்    தொலையாத  கொலைவெறியில்   உள்ள இலங்கைதகைமையுடன்  தமரென்றே  சொல்ல  வைக்கும்    தணிவான  சொற்கள்தாம்  செல்லும்  சொற்கள் !பக்கத்து  வீட்டாரைப்  பழக  வைக்கும்    பண்பான  சொற்கள்தாம்  வெல்லும்  சொற்கள்நக்கலாகப்  பேசுவோரை  நயக்கு  மாறு    நவிலவைக்கும்   சொற்கள்தாம்  வெல்லும்  சொற்கள் !துக்கத்தை   மாற்றுகின்ற   மருந்தாய்  ஆகித்    துணையாகும்  சொற்கள்தாம்  வெல்லும்  சொற்கள்எக்கருத்தே   ஆனாலும்  ஏற்கும்  வண்ணம்    எடுத்துரைக்கும்  சொற்கள்தாம்  வெல்லும்  சொற்கள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com