பணிமுடிந்து தாமதாய் வீடுவரும் போதெல்லாம் பொங்கிவரும் கோபமுடன் வரவேற்பாய் என்றறிந்தும்...'இனிநானும் சீக்கிரமாய் வந்திடுவேன்' எனும்பொய்யை நான்சொல்ல, மெய்யில்லை எனத்தெரிந்தும் நீஏற்பாய் !விடுமுறையில் வீட்டினிலே அலுவலகப் பணிசெய்தால் கடுகெனவேப் பொரிந்திடுவாய் என்றறிருந்தும் நான்செய்யஅடுமனையில் பாத்திரங்கள் எனக்காக அடிவாங்கும்! உள்ளோடு அன்பேந்தி உணவுஎனைத் தேடிவரும் !கொஞ்சிவிளை யாடிவரும் கோபமதில் ஊடல்வரும் ! எந்திரமாம் வாழ்வினிலே புத்தம்புது இன்பதரும் !வஞ்சிஉனை அரவணைத்து நானிணையும் நேரம்வரும் ! வந்தவுடன் கோபமெலாம் அன்பனவே மாறிவிடும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.