காணாமற் போனது
கருவிலேயே...
கர்ணனா?
கைகழுவியது யார் ?
பிறர் பிழையால்
ஆரம்பத்திலேயே முடிந்த
வாழ்க்கைப் பந்தயம் ?
பாக்கியம்
பறிமுதல் செய்யப்பட்ட
புத்திர காமேஷ்டி?
குரல் கேட்காத
குறைக் குழந்தையின் அழுகை...
உணர்ந்தும் உணராமல்
சுமந்தவள்...?
மாவடுவா மனிதவடு ?
புரட்டும் முன்பே
பரியாமற்போன
புதுக்கவிதை ?
யாருடைய பாவத்தின்
சம்பளம் ?
ஊணர்வு வரும் முன்பே
யாரிடம் கேட்பது
பாவமன்னிப்பு..?
தனுகரண விதிகள்
புவனம் வரும் முன்பே
பொய்த்தது!
தலைவிதியை
எழுத ஆரம்பிக்கும் போதே
பிரமனின் எழுதுகோல்
முறிந்தது ?
மன்னித்துவிடு இறைவா...
குற்றவாளிக் கூண்டில்
யார் நிறுத்தப்பட்டாலும்
உடனாய் நீயும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.