கருவில் தொலைந்த குழந்தை: கவிதா வாணி
காட்டிலும் மேட்டிலும் ரோட்டிலும்
கடவுளுனைக் காணக் - காத்திருந்தேன்
கண்கள் பூக்க,
கலைந்த கேசத்துடன் குலுக்கும் குவளை யுடன்
கார் கண்ணாடியைத் தொட்டுத் தடவி -
உதவி கேட்டான் கண் மட்டும் இல்லாத - நண்பனொருவன்
கைப்பையை திறப்பதற்குள்
பச்சை விளக்கு ஒளிர - நான் நிதானிப்பதாய் -
பின் வரிசை வாகனங்கள்- ஒலி வரிசையில் பிளிர -
நிறுத்தம் தாண்டி - காரை விட்டுத் தொடர்ந்தேன் -
அவனுக்கு உதவ,
அவனுக்கு அளித்த சிறு தொகையால் நான்
அகமகிழ்ந்து காருக்கு திரும்ப-
கார் பின் கண்ணாடி உடைந்திருந்தது - கைப்பையும் களவாடப்பட்டு,
நானோ- கருவில் தொலைந்த குழந்தையாய் தெருவில் நின்றிருந்தேன்
செய்வதறியாது .
உன் குத்தமா - என் குத்தமா
யார இங்கு சொல்ல?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
