ஊருக்கு வெளியிலேயே போகும்சொகுசு பேருந்து போலஇந்த உலகிற்கு வராமலேயே போனஎன் வயிற்று முத்தே!கடலில் மூழ்கியே! மூச்சு அடக்கி!முத்தெடுப்பவர்க்கு மத்தியில்நான் மூழ்காமல் இருந்துஎடுக்க நினைத்த முத்து நீ!உன்னை கள்வன் கடத்தி இருந்தால்காவலரைக் கொண்டு மீட்டிருப்பேன்!உன்னை காலன் கடத்தியதால்யாரைக் கொண்டு மீட்டெடுப்பேன்?வெறிபிடித்த விலங்குகளின்பாலியல் வேட்டையாடும் செய்தி கேட்டுகருவிலேயே தொலைந்தாயோ!கண்மணியே!இன்று பள்ளியில் படிப்பதற்கேபல லட்சம் வேண்டியதால்!குழந்தை தொழிலாளியாகும்கொடுமை நிகழுமென்றுகருவிலேயே தொலைந்தாயோ!உலகில் உணவெல்லாம்நஞ்சாகிப் போனதென்று!நஞ்சுக்கொடி உணவோடுநாட்டை விட்டே சென்றாயோ!பூமியில் பனி, வெய்யில்தாக்கும் என்று!பனிக்குடத்தில் இருந்துபறந்து சென்றாயோ!நீ தொட்டிலுக்குவருவாய் என நினைத்தேன்!தொப்புள்கொடியோடுதூரதேசம் சென்றாயே!தொலைந்ததை தொலைந்த இடத்தில்தேடினால்தானே கிடைக்கும்!கருவில் தொலைந்த உன்னைக்கருவிலேயே தேடுகிறேன்!கருவில் மீண்டும் வா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.