கருவில் தொலைந்த குழந்தை: கே.நடராஜன்

Updated on
1 min read

கவிதை ஒன்று  எழுத நல்ல 
கரு ஒன்று தேடினேன் நான் 
சுறு சுறுப்பாக !
 
விறு விறு என்று எழுதி தள்ளினேன் 
பக்கம் பக்கமாக !

ஒரு கரு அல்ல ..ஒரு நூறு 
கரு என் கவிதைக்கு போட்டது 
அடித்தளம் !

எதுகையும் மோனையும் கோர்த்ததா 
கை என் கவிதையில் ? இல்லையே !
என் கவிதை எனக்கே புரியாத 
விடுகதை ஆனதே !

தேடித் தேடி கருவை விதைத்தும் 
உருவாகவில்லையே ஒரு நல்ல 
கவிதை!

கருவிலே தொலைந்த குழந்தை 
போல ஆனதே என் கவிதை ! 

நல்ல கரு ஒன்று தேடுகிறேன் 
மீண்டும் நான் ! கருவிலே தொலையாமல் 
இந்த  புது கவிதை என் மடியில் கொஞ்சி 
விளையாட வேண்டும் ஒரு குழந்தை போல !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com