கட்சிக்காரர்களின்காவிக்காரர்களின்காமக் தீக்கரங்களில் சிக்கிக்கருகிடும் பூமொட்டாய்ச் சிதைவோமோ…கடவுளையே சாட்சியாய் வைத்துக்கர்ப்பக் கிரகத்துள் அடைத்துக்கர்ப்பம் தரிக்கச் செய்வார்களோ…போதைக் கணவன் வாள்சுழற்றும்போர்க்களத்தில்ஒவ்வோர் இரவும் ரணகளமாகுமோ…பாதையில் நடக்கும் போதுபலரின் பார்வை முட்கள் குத்துமோ…மேலதிகாரியின்மேனிச் சீண்டலில்பதறும் உடலோடுகதறுமோ மனம் மவுனமாய்?கடவுளாய்த் தோன்றும் கயவரின்காதல் கலையில் ஏமாந்துமரக்கிளையில் தொங்கித்தற்கொலையில் முடியுமோ வாழ்வு?மனம்ஒப்பாத காதலை மறுத்தால்அமில வீச்சில் எரியுமோஅழகிய முகம்?பிறக்கப் பயந்துகருவிலே தொலைந்தது குழந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.