கருவினில் தொலைந்திட்டக் குழந்தைகள் கணக்கு கணக்கினில் அடங்காது, கல்வி அறிவிலா மூடர்கள் செயலிதைக் காலமும் பொறுக்காது!பெருமை இலாச்செயல் என்பதை உணராப் பேதைகள் பலருண்டு, பெரும்பழி இதனால் கிட்டிடும் என்பதை பேதைகள் உணரட்டும்!அருமை மிக்கதே இரண்டும் என்கின்ற அறிவார்ந்தத் திறன்கொள்ளார், அழிப்பதோ பெண்ணினை கருவினில் வைத்தே, ஆரிதைப் பொறுத்திடுவார்?தருமமே இல்லாச் செயலிது நம்மின் தமிழகந் தனிலுண்டு, தாங்கொணாக் கொடுமை இதுதன்னை நாமெலாம் தடுத்திடத் தான்வேண்டும்!அலைமகள் மலைமகள் கலைமகள் தமைநாம் அனுதினம் துதிக்கின்றோம், அகிலத்தைக் காத்திடும் தேவியர் இவரென அறிந்திட்டுப் போற்றுகிறோம்!நிலையிதை உணராப் பேதைகள் தானே நீக்குவார் கருவினிலே, நிலையற்ற வகிதத்தில் ஆண்பெண் என்றிட நேர்ந்திடும் அவலங்களே!விலைதந்து பெண்களை வாங்கிடும் நிலைமை விரைவினில் வரக்காண்போம், விளக்கம் இல்லா ஆண்களுக் கினிமேல் விவாகம் இலையாகும்!கலைப்பதும் பெண்களேதானிந்த கொடுமையைக் கவனத்தில் கொளவேண்டும்,கருத்துடன் அரசும் இதுதன்னை ஒழித்திடும் கடமையைச் செயவேண்டும்!பெண்குழந்தை வேண்டாமென பெரிதுமாய் மக்களின்றுஎண்ணுவதும் கொடுமையே, இழிவூட்டும்!--இன்னதும்கல்வியறிவு இல்லாதக் கபோதிகள் செயலாகும்;இல்லாதே போகுவதும் என்று?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.