முன்னோர்கள் மனக்கருவில் வளர்த்துத் தந்த முதன்மையான பண்பொழுக்கக் குழந்தை தன்னைப்பன்னாட்டு மோகத்தால் பாதை மாறிப் பகட்டினிலே உருமாற்றித் தொலைத்து விட்டோம்தன்னலத்தால் யாதும்ஊர் கேளிர் என்னும் தகுநட்பு மனிதத்தை விட்டு விட்டோம்தன்மகனைத் தன்னுயிரை நீதிக் காகத் தந்திட்ட நேர்மையினைக் கொன்று விட்டோம் !சங்கத்துத் தமிழரெல்லாம் சாதிக் யற்ற சமத்துவத்தில் வாழ்ந்ததினைச் சிறுமை செய்துசங்கங்கள் சாதிக்காய் ஏற்ப டுத்திச் சண்டையினை வீதிகளில் போடு கின்றோம்மங்கலமாய் மூவேந்தர் வளர்த்த ளித்த மாத்தமிழை மூலையிலே முடங்க வைத்தேஎங்கிருந்தோ வந்தவன்கால் அடிமை யாகி ஏற்றமிகு மானத்தைப் புதைத்து விட்டோம் !கருவினிலே உள்ளசிசு பெண்தான் என்றால் கருவினையே கலைக்கின்ற கயமை போலஅருமன்றல் சாதிமாறிப் புரிந்தோர் தம்மை அழிக்கின்றபெற்றோரின்கொடுமைபோலபெருமைமிகு தமிழ்மொழியைத் தமிழ னின்று பெயர்சொல்லி அழைப்பதற்கும் நாணம் கொண்டுதிருவிழாவில் குழந்தையினைத் தொலைத்தல் போன்று திருவனைத்தும் தொலைத்திட்டான் மொழியி ழந்தே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.