கருவில் தொலைந்த குழந்தை:  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

Updated on
1 min read
கருவொன்று உருவாகையில் ஊற்றெடுக்கும் வெள்ளம்!உருவாக்கம் கொடுக்கையில் உபத்திரவங்கள் அள்ளும்!முழுதாக முடிக்க நினைக்கையில்பழுதாகி பாதியில் நிற்கும் படைப்பு!உழுது விளைந்த நிலத்தில் கொல்லியாய் பூச்சிகள் போலஎழுத விளைந்த மனத்தில் கொல்லியாய் வறட்சி!கருவிலே தொலைந்த குழந்தையின் காணாமுகமாய்உருவிலே வடிக்க முடியா படைப்புக்கள் பாதியில்!தெருவிலே வரையும் ஓவியம்மிதிபட்டு மறைந்து போவது போலகருவிலே உருவாகும் கற்பனைகள் காட்சிகள்எண்ணங்கள் உடைபட்டு சிதைந்து போகும்!இயற்கையும் சூழலும் இனிமையான பொழுதும்கிடைக்கையில் எண்ணப்பிரவாகையில்உதிக்கும் முத்துக்கள் நல்ல கருவாகும்!கருவான பின்னாலே மனதிலே சஞ்சலமும் சலனமும்மறைந்து நின்றால் மகிழ்வாக பிறந்திடும் படைப்பு!சஞ்சலங்கள் துன்பங்கள் சலனங்கள் சலிப்புக்கள்பெருகிவிட்ட மனதினிலேகருவிலே தொலைந்த குழந்தைபோலகலைந்து போகிடும் நல்ல படைப்புக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com