கானல்நீ ராய்காட் சிதரும் திட்டம் - இன்று
காணாமல் போன சேதுக் கால்வாய் திட்டம்!
கருவில் தொலைந்த குழந்தைதான்!
காவிரிநடு வர்மன்றம் – உச்சநீதி மன்றம்-வழி
காட்டிக் கோடுத்த ஆணைக ள்யாவும்
கருவில் தொலைந்த குழந்தையாய் தெரிகிறது!
நீட்தேர்வு கொண்டு மறை முகமாய் – மய்யரசு
நீக்கப் பார்க்கிறது ஒதுக்கீட்டை! அதுவும்
கருவில் தொலைந்த குழந்தையே!
வெள்ளையனே, வெளியேறு முழக்க மிட்டாம் அந்நாளில்
வெள்ளைய்னை வரவழைக்க திட்டமிட்டோம் இந்நாளில்
விடுதலையே பரிபோகும் அவ்ல நிலைகூட
கருவில் தொலைந்த குழந்தைதான்!
கருவில் தொலையும் குழந்தைகளைக் காக்க
கருவுரும் பெண்ணாய் தவிக்கும் தமிழகம் – மக்களிடம்
கருத்துப்புரட்சி ஏற்படுத்தல் வேண்டும்,
கருவில் குழந்தைகள் தொலையா வண்ணம்
காப்போம்! விரைவில்! வெல்வோம் வாரிர்!
விதைப்போம் அதற்குரிய கருத்தை நாளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.