பாதியிலே சொல்மறந்த கவிதை போல பணமிங்கு திடீரெனச்செல் லாதல் போலநீதிமன்ற இழுபறியில் தொலைதல் போல நிறைமதியோர் செயலற்றி ருத்தல் போலவாதிடுவோர் நினைவிழக்கும் தன்மை போல வழக்கினிலே சாட்சியங்கள் பிறழ்தல் போலநாதியற்றுக் கருவினிலே சிதைவு கண்டே நலமிழந்து தொலைகின்ற குழந்தை அய்யோ!ஊன்சுமந்த உயிர்சுமந்த கருவ றைக்குள் உள்ளபெரு மிருள்மூழ்கி வளர்வ தற்குள்தான்சுமந்த கருவினிலே தொலைந்து போன தவங்கிடந்த குழந்தையினை என்னென் பேன்நான்?வான்தொலைந்து போனதுவோ வண்ண மின்றி வளர்காமம் உருவாக்கித் தந்த தென்றுதேன்மலரும் மலருமுன்னே உதிர்தல் போலத் திருவாகும் முன்கருவில் தொலைந்த தன்றோ!யார்குற்றம் பெற்றெடுக்கும் துணிவு மின்றி அயலாரின் அவலச்சொல் தவிர்க்க எண்ணிஓர்உயிராய் கருவுக்குள் வளர்ந்த அந்த உன்னதமாம் குழந்தையினைத் தொலைத்தல் நன்றோ!பேர்சுமக்கும் பெண்குழந்தை என்று கண்டால் பெறும்கருவில் துவக்கத்தில் அழிப்ப தற்கு யார்முனைந்த போதுமவர் எதிரி யாவார். ஆதரவாய்க் தொலைக்காமற் கருகாப் போமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.