கருவில் தொலைந்த குழந்தை: சுஜாதா ஜெயராமன்

Updated on
1 min read
கதறி அழுகின்றன, கெஞ்சுகின்றன ஆசிபாக்களும் ஹாசினிகளும் கீதாக்களும் கடுமையான சட்டங்களினால் என்னைதாயின் கருவறையில் காப்பாற்றியது,கோயில் கருவறையில் கழுவறுக்கத்தானா? என்னை முழுமையான பெண்ணாய் வளர  விடவில்லை,நான் பூப்பெய்தி பருவ பெண்ணாய்வாழும் வரை  விடவில்லை.பாவிகளே! என் பால்  பற்கள் கூட இன்னும் மாறவில்லை. அதற்குள் என்னை பருந்துகளாய் குதறி விட்டேர்களே! பெண்சிசு பாலின கண்டறியும் தடைக்கான சட்டத்தை எனக்காகவாவது தளர்த்தியிருக்கலாம். தாயின் கருவறையிலேயே என்னை கொன்று ஒழித்திருந்தால் மரணத்திலும் என் கண்ணியம் காக்கப்பட்டிருக்குமே!இனியாவது சிசு பாலின  சோதனை தடைச்சட்டம் கடுமையாக்கியது போல் குழந்தைகளை பாலுணர்வுடன் தீண்டும் காமுகர்களை கண்டதுண்டமாக வெட்டி போட கடுமையாக சட்டம் கொண்டு வாருங்கள். தாயின் கருவறையில் எங்களை காப்பாற்றிவிட்டு , பலிபூசைக்கு நேர்ந்து விட்ட ஆடுகளை போல் எங்களை ஐந்து  வயதிலும் , பத்து வயதிலும் காமந்திர கயவர்களுக்கு காவு  கொடுக்கநாங்கள் பிறக்கவே  விரும்பவில்லை.கருவறையிலேயே தொலைந்த குழந்தைகளாய்இறக்கவே  விரும்புகிறோம் !கருவிலிருப்பது பெண்குழந்தை என்று தெரிந்தால்,  பெண்சிசு கொலை பயம் மட்டும் காரணமில்லை. கருவிலிருப்பது பெண் குழந்தயானால்கருவறைக்குள்ளேயே கற்பழிக்கும் கயவர்கள் உலவும் தேசமிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com