கருவில் தொலைந்த குழந்தை: செந்தில்குமார் சுப்பிரமணியன்

Updated on
1 min read

காற்றிலே கத்தி வீசி கானகத்து குயில்களோடு
ககனமெங்கும் கவி பாடி
காலாற நடந்தபடி
கால் நூற்றாண்டு பின் செல்ல,

கால வெளி தன்னில்
கை பேசி இல்லாமல்
கரங் குவித்து சொந்த முடன்
காலம் கழித்த நன்னாட்கள் /
கருத்தினிலே உதித்ததுவே
காதல் மொழி பேசி
கன்னியரும் காளையரும்
கிள்ளை கூட்டமென
குதூகலித்து சிலாகித்த
குரல் கேட்டு மறைந்தது வே
குரவைக் கூத்தைப் போல

கும்பிட்ட கரங்களிலே
காசு கேட்கா உலக மதில்
கள்ளமில்லா நட்பு தனை
காலமெல்லாம் நேசித்து

கனிவுடனே - பெரியோரை
காப்பாற்றி போற்றிட்ட
காலமது மறைந்திடவே -

கலிகாலம் திரும்பிட்டேன்,
காப்பகத்தில் பெற்றோராம்,
காசு - பணம் வழித்துணையாம்
கண்துடைப்பு உலக மதில்
கால் காசு _ மதிப்பில்லா
கால தேச நிகழ்விடத்தில்
கழன்று போன உணர்வூட்ட
கற்பனையில் வாழ்ந்ததனால்

கருவிலே தொலைந்தோமா
கண்ணியம் தான் இழந்தோமா? என
கடவுளிடம் கரம் குவித்து

காலம் தரும் பதில் வேண்டி
காத்திருப்பேன் எந்நாளும்.
கருவிலே திருவுடையார்
வர வேண்டி வழிபார்த்தேன்
கானகத்து பெரியோர் இவ்விதம் பாடியதைக் கேட்டேன்,

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்; 
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்; 
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்; 
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்; 
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

கருவாய் உயிராய் கதியாய் விதியாய் நமை நடத்திடும்
நற்செயல் எதுவோ?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com