யார் இட்ட சாபம்: கோ. மன்றவாணன்

Updated on
1 min read
சீர்இட்ட செய்யுள் போலச்     செப்பமாய் மிளிர்ந்த என்னைப்போர்இட்ட களமாய் மாற்றிப்     போட்டது எதனால்? யாரால்?நீர்இட்ட நெருப்பு அணைந்து     நீறென மாறல் போலயார்இட்ட சாபத் தாலே     என்வாழ்க்கை சாம்பல் ஆச்சு?நல்லதை விரும்பிச் செய்தேன்     நாடிது மதிக்க வில்லைஉள்ளதை உரைத்து வைத்தேன்     உலகிது நம்ப வில்லைகல்லதை வைரம் என்பார்     கருமையை வெண்மை என்பார்சொல்லதை மாற்றிப் பேசும்     சூழ்ச்சியர் வெல்லு கின்றார்சட்டத்தைக் கற்றேன்; நீதி     சபையினில் நேர்மை இல்லைபட்டத்தைப் பெற்றேன்; எங்கும்     பணியது கிடைக்க வில்லைவிட்டத்தைப் பார்த்துப் பார்த்து     வெறுங்கனா காணு கின்றேன்திட்டத்தை யார்தான் சொல்வார்     தேசத்தில் அறங்கள் வெல்ல?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com