யார் இட்ட சாபம்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

Updated on
1 min read

வானம் பொய்த்து மழை
இனிமை குளிர்ச்சி இல்லா
வறண்ட வானிலை யார்
இட்ட சாபம் தெரியவில்லை

பூமி எங்கும் வறண்டு நீர்
இல்லாமல் நிலங்கள் 
வெடித்து ஆறுகள் துவண்டு
யார் இட்ட சாபம் இதெல்லாம் 

மனித மனங்களில் ஈரமும்
இல்லை கண்களில் என்றும்
கண்ணீரும் இல்லை யார்
இட்ட சாபம் புரியாத புதிர் "

முதியோர் இல்லம் புதுப்புது
துவக்கம் முதிர்கன்னி ஏக்கம்
திருநங்கைகள் தாக்கம்
யார் இட்ட சாபம் இந்த நிலை 

கள்ளக் காதலும் தகாத
உறவுகளும் கலங்கிய
எண்ணங்களும் உருவாக
யார் இட்ட சாபம் கேள்வி. 

பருவநிலை மாற்றம் ஒரே
இயற்கையின் சீற்றம்
மாறுபட்ட கோணம் யார்
இட்ட சாபம் மனம் நோகுதே

கல்விக்கு காசு மருத்துவம்
காசு கலைகள் காசு தூய நீர்
காசு இப்படி பணப் பேய்
பிடித்தாட்ட யார் இட்ட சாபம்

மனிதநேயம் நேர்மை நல்
எண்ணம் உழைப்பு எதிர்கால
தேடல் குறைந்ததே காரணம்
சாபம் அல்ல தொலைக்கு
பார்வை இல்லா சறுக்கல் .    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com