யார் இட்ட சாபம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
அம்புகுறி   மாறிப்போய்   தைத்த  தாலே            அரும்புதல்வன்  தனையிழந்த  முனிவ  ராலேதம்மகனைப்  பிரிந்துமன்னன்   தசர  தன்தான்            தவித்திட்டான்  இறந்திட்டான்  சாபத்  தாலே !அம்மம்மா  அகலிகைதன்  அழகைக்  கண்டே            அடங்காத  காமத்தால்   இந்தி  ரன்தான்தம்முடைய   உடல்முழுதும்   குறிகள்  பெற்றான்            தவமுனிவர்  கவுதமன்தன்  சாபத்  தாலே !விருந்தாக  வந்ததன்னைக்  கவனிக்  காமல்            வீற்றிருந்த  சகுந்தலைக்குத்  தூர்வா  சர்தாம்அருங்காதல்  கணவனவன்  மறப்பா  னென்றே            அளித்திட்ட  சாபத்தால்   அவதி  யுற்றாள் !பெருமைமிகு  வித்தையினைக்  கற்ப  தற்கே            பெயர்மாற்றிப்  பொய்சொன்ன   கார  ணத்தால்அரும்வித்தை   தனைமறப்பாய்   என்று  சாபம்            அளித்திட்டார்  பரசுராமன்  மறந்தான்  கர்ணன் !நெல்லையப்பர்  அருங்கோயில் ;  கருவூர்  சித்தர்            நெஞ்சமிட்ட  சாபத்தால்  அழிந்த  போலஎல்லாமும்  இங்கிருந்தும்  தமிழ  நாடோ            எவருமில்லா   ஏதிலியாய்  ஆன  தேனோ !நல்லவர்கள்  முடங்குவதும்  கயவ  ரெல்லாம்            நாடாள  வருவதெல்லாம்  எவர்சா  பத்தால்வல்லவராய்  இளைஞரெல்லாம்  எழுந்தால்  போதும்            வளமாகும்  சாபமெல்லாம்  பொடியாய்ப்  போகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com