கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்

Updated On :21 மே 2018, 9:32 am

நிலத்தடி நீர் கீழே கீழே
ஓடிப் போவது...
யார் இட்ட சாபம்?
பருவத்தே  பொழிய மறந்த 
மழை நிலத்தைத் தொட 
பயந்தது........
யார் இட்ட சாபம்?
வரம் கொடுத்த சிவனின் 
சிரத்திலேயே வரன் பலிக்கிறதா 
என முயற்சித்த 
அசுரன் கோபத்தில் 
இட்ட சாபத்தானோ?
வரம் கொடுக்க 
யோசிக்காத  கடவுள் 
கொடுத்த  வரத்தினால்
பட்ட அனுபவத்தினால் 
இட்ட சாபம்தானோ
இன்றைய நம்  இன்னல்கள்?
நாம்  உருவாக்கிய பணம்
என்ற காகிதம்   
ஈன்ற  தாயினையும்  கொலை 
செய்ய  தூண்டியது  
யார் இட்ட  சாபம்? 
மனிதனே...... யோசியுங்கள் 
சாபங்களின் தாக்கம் இன்றி வாழ 
பாபங்கள்  செய்வதை  தவிர்ப்போம்!
நேர்மையுடன்  வாழ்வோம்!!!!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.