யார் இட்ட சாபம்: கவிஞர் பி.மதியழகன்

Published on

அமைதியை நாடிச் சென்ற 
நீண்ட நெடியப் பயணம் அது...
அழகுக்கு அங்கே பஞ்சம் இல்லை
துளித் துளியாய்ப் பனித்துளிகள்; 
அதில் நனைந்துச் சிரிக்கும் கொடியிலைகள்...
அதிகாலைப் பொழுதைத் துவங்கும் 
ஆதவனின் ஆயிரம்கோடிச் செங்கரங்கள்; 
இதமான தன் இளம் சூட்டுடன்
பதமாகச் சோலையில் 
படர்ந்து விரிந்துச் செல்ல...
ஆடிவந்த அழகுத் தென்றலின் உரசலில் 
இழைக்கயிறுபோல வளைந்துக் கிடந்த
அந்த நச்சுப்பாம்பும்
உலர்ந்துப் புலர்ந்து எழும்பியே
பாடிவந்த பஞ்சவர்ணக் கிளியிடம்
தன் சுயரூபத்தைக் காட்டியது 
யார் இட்ட சாபமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com