என்றும் என் இதயத்தில்: பாலா கார்த்திகேயன்

Updated on
1 min read

அன்று முதல் இன்று வரை 
என்றுமே நிலைத்திருக்கிறாய் 
ஒன்றான இரு இதயங்கள் 
கண்ணிரெண்டின் கண்மணிகள் 

வடிவம்  பதிந்து உள்ளது
நரம்புகள் போல் பின்னியுள்ளது 
ஆயிரம் துன்பம்  வரினும் 
ஆதரவாய் நிலைத்திருப்பது 

விட்டுக் கொடுத்தலில் 
மேன்மை கண்டது 
விடாமல் செடி போல் மனதில் 
பற்றிக் கொண்டது 

தள்ளி தள்ளி போனாலும் 
தன்னிகரற்ற நினைவுகளால் 
ஒன்றிணைவது 
அள்ளி அள்ளி எப்போதும் 
அணைக்கத்துடிப்பது 

என்றும் என் இதயத்தில் 
அன்று முதல் இன்று வரை 
ஊன்றி நிலைத்திருப்பது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com