ஜெய்ப்பூர் கற்களாய்
ஜொலிக்கும் முகம் –
உன் கண்களில்
எத்தனை கானங்கள் –
பார்வையில் தாகம் பார்த்திருக்கிறேன்
ராகம் காண்கிறேன் இன்று –
பற்களில் பதுக்கிய
ரேடியம் – குழப்பத்தில் பியரி க்யூரி--
சொர்க்கம் தெரிந்ததால்
உன் சொற்களில்
பொருள் தேடியதில்லை –
இளம்பூவாய் தொடத்தூண்டும்
உதடுகள் – பின்
சாயம் எதற்கு ? இருக்கட்டும் --
எனக்குத்தெரியும்
என்றுமே நீ உன் மனதிற்கு
சாயம் பூசியதில்லை—
என் அகவரியில்
உன் முகவரி பதித்து
என் தலையெழுத்தை சுகவரிகளாய்
மாற்றியவளே !!
உனக்காக,
நீ வந்து அமர ,
என்றுமே என் இதயத்தில்
நான்கு அறைகள் !!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.