என்றும் என் இதயத்தில்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

Published on
Updated on
1 min read
சில நேரம் சண்டைகள்சில நேரம் ஊடல்கள்;கலையாத காதலுடன்விளையாடும் தருணங்கள்..தொலைதூரம் சென்றாலும்துணையாகும் நினைவுகள்;அருகாமை வந்தவுடன்அழகாகும் தருணங்கள்...மௌனத்தில் முத்தங்கள்முத்தத்தின் சத்தங்கள்...மொழியேதும் இல்லாமல்உரையாடும் நிமிடங்கள்; மதுவுண்ட மயக்கத்தில்மலர்மீது இளைப்பாறும்சிறுவண்டு அதுபோலுன் மடிமீது தூக்கங்கள்...மாற்றமே வையகத்தில்நிரந்தரம் எனும் நியதிஏற்றமும் தாழ்மையும்வாழ்க்கையின் ஒரு பகுதி;ஆண்டுகள் உருண்டோடும்அகவையும் பல கூடும்இளமையும் முதுமையாய்மாறும்நாள் வரக்கூடும்எதுவந்த போதிலும்எவர்சென்ற போதிலும்விதிநமக்குப் பலவற்றைவினைத்திட்ட போதிலும்வென்றாலும் தோற்றாலும்கொன்றாலும் எந்நாளும்குன்றாத அன்புடையஅன்றிலின் காதல்போல் என்றும் என் இதயத்தில் இன்று போல் நீங்காமல்துடிப்பாக நீயும் - உன்துணையாக நானும் ...                               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com