கிராமத்து தேவதையின்நீர் நிலையில் நீச்சல் பழகியதும்!பணமில்லா பருவத்திலும்பனை நுங்கு வண்டியோட்டியதும்!வானுயர்ந்த மரம் ஏறிவானைத் தொட முயன்றதுவும்!காடு மலை ஏறிகலாப் பழம் பறித்ததும்!கொட்டும் மழையிலும்குடையின்றி நனைந்ததும்!தெருக்கூத்து களரி கட்டுமுன்னேகூத்தாடி மகிழ்ந்ததும்!அடர்ந்த காட்டுக்குள்ள ஆடு மேய்க்கயிலேசுனை தண்ணீரில் தாகம் தணிந்ததும்!அரைபிடல் அடித்தே சைக்கிள்ஓட்டிப் பழகியதும்!மரக் கிளையில் ஓனாங் கொடிகட்டிஊஞ்சல் ஆடியதும்!எருவு அடிக்கும் மாட்டுவண்டி பின்னாடிவவ்வாலைப் போல் தொங்கியதும்!என்றும் என் இதயத்தில்நிழலாடும் நினைவுகளாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.