என்றும் என் இதயத்தில்: மீனா தேவராஜன்

Updated on
1 min read

என்றும் என் இதயத் தாமரையில்
நின்று நிலவும் என்தாய் மொழியே!

நீயின்றி வேறொன்றில்லை - என்றும்
தாயும் தந்தையும் நீயே தமிழே!

ஆண்டுகள் ஈராயிரம் முன்னருலகில்
ஆட்சி ஓச்சிய  என்னழகு தமிழே!

குமரி வேங்கடம் இடையில் – என்றும்
பரவியது போய்ப் பாரில் தவளும் தமிழே!

செம்மைமொழியே செந்தமிழ் தேனே!
பன்மைமுகத் தாய்த்தமிழே! பாரில்
பன்மொழி யாம் கற்றாலும் – என்றும்
எம் உள்ளம் ஊறும் இன்பூற்றே!

எம் நாவில் நூலில் உறைவாய்
எம் நாவில் உன்னொலியே ஒலிக்கும்
வான் மண் நிலவி நிற்கும் -- என்றும்
மனக்கடலில் அலைவீசுவாய் நீயே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com