யாமே அருவினையோம், சேயோம், என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்துஒழிந்தார், பூமேய
செம்மாதை நின்மார்வில் சேர்வித்து, பார்இடந்த
அம்மா! நின் பாதத்து அருகு.
எம்பெருமானே, செந்தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் சிவந்த திருமகளை மார்பில் சேர்த்துக்கொண்டவனே, அழுந்திக்கிடந்த பூமியை எடுத்து மேலே கொண்டுவந்த அம்மா!
உனது திருவடிகளுக்கருகே என் நெஞ்சு வந்துசேர்ந்துவிட்டது, உன்னோடு நெருங்கிவிட்டது, ஆனால், பாவம் செய்தவனான நானோ தொலைவில் நிற்கிறேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.