நுமக்குஅடியோம் என்றுஎன்று நொந்துஉரைத்துஎன் மாலார்
தமக்கு, அவர்தாம் சார்வுஅரியர்ஆனால்? எமக்குஇனி
யாதானும் ஆகிடுகாண் நெஞ்சே, அவர்திறத்தே
யாதானும் சிந்தித்துஇரு.
நெஞ்சே,
எம்பெருமானை நெருங்குவதுதான் மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறதே! அவரிடம் சென்று 'நான் உங்களுக்கு அடிமை' என்று வாய்நோகத் திரும்பத் திரும்பச் சொல்லி என்ன பயன்?
இனி, நமக்கு என்ன ஆனாலும் சரி, நீ அவரை மட்டுமே சிந்தித்துக்கொண்டு இரு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.