இருநால்வர், ஈர்ஐந்தின்மேல் ஒருவர், எட்டோ(டு)
ஒருநால்வர், ஓர்இருவர் அல்லால், திருமாற்கு
யாம்ஆர், வணக்கம்ஆர், ஏபாவம், நல்நெஞ்சே,
நாமா மிகஉடையோம் நாழ்.
நல்ல நெஞ்சே,
எம்பெருமானை வணக்குவதற்கு எட்டு வசுக்கள், பதினொரு உருத்திரர்கள், பன்னிரண்டு சூரியர்கள், இரண்டு அசுவினி தேவர்கள் என முப்பத்து மூன்று தேவர்களும் வருகிறார்கள்,
அவர்களோடு ஒப்பிடும்போது நம் பக்தி ஒரு பெரிய விஷயமா? குற்றம் செய்தவர்களாகிய நாம் அத்துணைப் பெரியவர்களா? எம்பெருமானுக்கு நம்முடைய பணிவு ஒரு பெரிய பொருட்டாகுமா? அடடா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.