நாழால் அமர்முயன்ற வல்அரக்கன் இன்உயிரை,
வாழாவகை வலிதல் நின்வலியே, ஆழாத
பாரும்நீ, வானும்நீ, காலும்நீ, தீயும்நீ,
நீரும் நீயாய் நின்ற நீ.
எம்பெருமானே, தண்ணீரில் ஆழாது நிற்கும் நிலமும் நீ, வானும் நீ, காற்றும் நீ, தீயும் நீ, நீரும் நீ, இப்படிப் பஞ்சபூதங்களாகவும் நிற்பவன் நீயே,
(ராவணன் என்கிற ஒரு) வலிய அரக்கன் அகங்காரத்தால் (உன்னுடன்) போருக்கு வந்தான், அவன் வாழாதவண்ணம் அவனுடைய இன்னுயிரைப் பறித்துக்கொண்ட வலிமையுடையவனே, உன்னை எவ்வாறு போற்றுவேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.