நீஅன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுஉழன்றாய்?
போய் ஒன்று சொல்லிஎன்? போநெஞ்சே, நீஎன்றும்
காழ்த்து உபதேசம் தரினும் கைகொள்ளாய், கண்ணன்தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
நெஞ்சே,
எம்பிரானை வணங்கு என்று நான் உனக்கு உபதேசம் சொன்னாலும், நீ கோபித்து அதைப் பின்பற்றுவதில்லை, என்னை ஆழமான துயரில் விழவைக்கவேண்டும் என்று மேலும் மேலும் முயற்சி செய்கிறாய்,
(நெஞ்சு அதனை மறுத்துப் பேசுகிறது)
அது போகட்டும், நாம் இருவரும் இப்படி மாறி மாறிப் பேசி என்ன பயன்? நிறைவாக ஒன்றைச் சொல்கிறேன், கேள், நாம் கண்ணனின் திருவடிகளை வணங்கி வாழ்த்துவதே சரி, (அதுவே நாம் உய்யும் வழி.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.