முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 5

ஏழு உலகங்களையும் தானே உருவாக்கி, காத்து
Updated on
1 min read

நல்கித் தான் காத்துஅளிக்கும் பொழில்ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனல்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே,
மல்குநீர்க் கண்ணேற்கு ஓர்வாசகம் கொண்டுஅருளாயே.

குளிர்ச்சியான, நீர்நிறைந்த தோட்டத்திலே இரை தேடுகிற வள்ளல் குணமுடைய சிறிய குருகே,

ஏழு உலகங்களையும் தானே உருவாக்கி, காத்து, அருள்புரிகிறான் எம்பெருமான், அந்த நாராயணனைக் கண்டால், 'இந்தப் பெண்ணுக்குத் திருவருள் புரியமாட்டீர்களா?' என்று கேட்பாயா? அவன் சொல்லும் பதிலை, கண்ணில் நீர்மல்க நிற்கும் என்னிடம் வந்து சொல்வாயா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com