உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர்முதலா முற்றுமாய்க்
கடல்ஆழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்
அடல்ஆழி அம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி
விடல், ஆழி மடநெஞ்சே, வினையோம் ஒன்றுஆம்அளவே!
ஆழ்ந்த மடநெஞ்சமே,
பிறவிச்சுழலில் சிக்கித் திரும்பத்திரும்பப் பிறக்கின்ற, மோட்சத்தைப் பெறக்கூடிய உயிர்களில் தொடங்கி அனைத்தையும் பிறப்பிப்பதற்காகக் கடலாகிய நீரைத் தோற்றுவித்தவன், அதனுள்ளே கண்வளர்கிறவன், வலிமையான சக்ராயுதத்தைக் கையிலேந்திய அம்மான், எம்பெருமான்.
அவனை நீ கண்டால், என் நிலைமையைச் சொல், அதோடு நிறுத்தாதே, பாவிகளான நீயும் நானும் அவனோடு ஒன்றாகும்வரை விடாதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.