முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 4

முப்பெரும் தேவர்களில் தொடங்கி
Updated on
1 min read

தான் ஓர்உருவே தனிவித்தாய்த் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தான் ஓர்பெருநீர்தன்னுள்ளே தோற்றி, அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான், மாமாயன், வைகுந்தன் என் பெருமானே.

எம்பெருமான் அனைத்துக்கும் முதற்பொருளானவன், தன்னை விதையாகக்கொண்டே அனைத்தையும் தோற்றுவித்தவன்,

முப்பெரும் தேவர்களில் தொடங்கிப் பல வானோர், முனிவர்கள், மற்ற அனைத்து உயிர்களையும் அவனே தோன்றச்செய்தான், இணையற்ற வெள்ளத்தை உருவாக்கி அதில் தானே கண்வளர்கிறான்,

வானோர் தலைவன், சிறந்த மாயச்செயல்களைச் செய்யவல்லவன், வைகுந்தன், எம்பெருமான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com