மான்ஏய் நோக்கி மடவாளை மார்பில்கொண்டாய் மாதவா,
கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா,
வான்ஆர்சோதி மணிவண்ணா, மதுசூதா, நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே.
மான்போன்ற பார்வையைக்கொண்ட திருமகளை மார்பில் கொண்ட மாதவனே,
மந்தரையின் கூன் நிமிரும்படி உண்டைவில்லால் அடித்த கோவிந்தனே,
வானில் சிறந்துவிளங்கும் சோதிவடிவான மணிவண்ணனே, மதுசூதனனே,
தேன்மலரும் உன்னுடைய திருவடிகளை நான் சேர வேண்டும், தீவினைகள் புரிந்தவனான எனக்கு அந்தப் பாக்கியத்தை அருள்வாயாக,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.